Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 6744 Likes :
Ingredients
கடலைமாவு 500 கிராம்
சிகப்பு மிளகாய் 10
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
பூண்டு 6 பல்
நெய் 1 தேக்கரண்டி
அரிசிமாவு அரை கப்
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
கடலைமாவுடன் அரிசிமாவு, கலந்து கொள்ளவும்.
மிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின் மாவுக்கலவை, அரைத்த பொருட்கள், பெருங்காயத்தூள், நெய், உப்பு இவற்றை சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு பெரிய கண் கரண்டியை (ஜல்லி கரண்டி) வாணலிக்கு நேராகப் பிடித்துக் கொண்டபடி சிறிதளவு மாவை எடுத்து கண் கரண்டி மீது வைத்து, உள்ளங்கையால் அழுத்தி, வேகமாக தேய்க்கவும்.
உடனே கிளறி விடாமல் ஓரளவு வெந்ததும் கிளறிவிட்டு, வெந்து சிவந்து, மொறு மொறுப்பானதும் எடுத்து, ஆறியதும் டப்பாக்களில் எடுத்து வைத்து தேவையான போது பரிமாறவும்.