Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 6488 Likes :
Ingredients
கோழிக்கறித் துண்டுகள் 750 கிராம்
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 மேஜைக்கரண்டி
பூண்டு 8 பல்
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மிளகு 2 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
பட்டை 4 துண்டு
கிராம்பு 4
பிரியாணி இலை 2
தேங்காய்ப்பால் 1 கப்
தனியாத்தூள் 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கோழிக்கறித் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற விடவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
சோம்பு, மிளகை தூளாக்கிக் கொள்ளவும்.
வாணலி அல்லது பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு இவற்றைப் போட்டு தாளித்து பூண்டு போட்டு வதங்கியதும், இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
அதன்பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
வதங்கியதும் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
வதங்கியதும் பாதி அளவு சோம்பு — மிளகுதூள் போட்டுக் கிளறி மூடி வைக்கவும்.
5 நிமிடங்கள் ஆனபின் தனியாத்தூள் மீதமுள்ள சோம்பு — மிளகுத்தூள் போட்டுக் கிளறவும்.
கிளறியபின் தேங்காய்ப்பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.