Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 1 அடைக்கு 5 to 7 நிமிடங்கள்
Hits : 4450 Likes :
Ingredients
பச்சரிசி 100 கிராம்
புழுங்கல் அரிசி 100 கிராம்
துவரம்பருப்பு 100 கிராம்
கடலைப்பருப்பு 100 கிராம்
உளுந்து 50 கிராம்
சிறுபருப்பு 100 கிராம்
சிகப்பு மிளகாய் 8
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
தேங்காய் 1 மூடி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
நெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு
Preparation Method
அரிசி, பருப்பு வகைகளை ஊற வைத்து, ஊறிய பிறகு மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு இவற்றுடன் ஆட்டிக் கொள்ளவும்.
தேங்காயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
ஆட்டிய மாவுடன், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் இவற்றைப் போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.
தோசைக் கல்லை காய வைத்து, மாவை கரண்டியில் சிறிதளவு எடுத்து நடுவில் வைத்து, சற்று பருமனாக, வட்ட வடிவமாக பரப்பி, நடுவில் ஓட்டை போட்டு இதனுள் சிறிதளவு நெய் ஊற்றவும்.
சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்து, சிவந்ததும் எடுக்கவும்.
ஆட்டி வைத்துள்ள எல்லா மாவிலும் இது போல அடை சுட்டு பரிமாறவும்.