சின்ன வெங்காயம்—பெப்பர் சிக்கன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 1 மணி 10 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 5607
Likes :

Preparation Method

  • கோழிக்கறியுடன் தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • ஊறியபின் குழையாமல் முக்கால் பாகமாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேங்காய்த்துறுவல், மிளகு இவற்றை வதக்கி எடுத்து, ஆறியதும் வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 3 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கி, இறக்கி வைக்கவும்.
  • அகன்ற வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து, கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
  • கோழிக்கறி மிகவும் வறுவலாக வதங்கியதும் வதக்கி வைத்துள்ள வெங்காயம், அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகு கலவை இவற்றைப் போட்டு மேலும் 10 நிமிடங்கள் சிவக்க வதக்கி, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA