Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 14317 Likes :
Ingredients
உளுந்து 250 கிராம்
இஞ்சி 2 அங்குலம்
பச்சை மிளகாய் 6
சின்ன வெங்காயம் 100 கிராம்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
நெய் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 1 லிட்டர்
Preparation Method
உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்டிக் கொள்ளவும்.
மாவு அதிக கெட்டியாகவோ அல்லது அதிக இளக்கமாகவோ இருக்கக் கூடாது.
இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மாவில் உப்பு, நெய், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு மாவை கையில் எடுத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை செய்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.