Preparation Time: 50 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 5863 Likes :
Ingredients
பச்சரிசி 500 கிராம்
உளுந்து 200 கிராம்
கடலைப்பருப்பு 500 கிராம்
வெல்லம் 250 கிராம்
ஏலக்காய்த்தூள் 2 சிட்டிகை
தேங்காய் 1
கடலை எண்ணெய் 750 மில்லி லிட்டர்
Preparation Method
அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்து, தோசைமாவு பதத்திற்கு ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை வேகவைத்து, வடித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்த்துறுவல் இவற்றை கெட்டியாக ஆட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு கலவையை சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, உருண்டையை மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து, பரிமாறவும்.