கோதுமை அல்வா

Spread The Taste
Serves
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7865
Likes :

Preparation Method

 • கோதுமையை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
 • அதன்பின் கோதுமையை ஆட்டி, தண்ணீரை பிழிந்து, பால் எடுக்கவும்.
 • வடிகட்டுவதற்கு மெல்லிய துணியை பயன்படுத்தவும்.
 • 2 அல்லது 3 முறை இது போல ஆட்டி, பால் எடுத்து வடிகட்டி, ஒரு நாள் முழுவதும் மூடி வைக்கவும்.
 • மேலே தண்ணீராகவும், அடியில் குழம்பலாக மாவு தேங்கி இருக்கும்.
 • தண்ணீரை விட்டு விட்டு தேங்கி இருக்கும் மாவை தயாராக வைத்துக் கொள்ளவும்.
 • முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தாவை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
 • அடி கனமான பாத்திரம் அல்லது கனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதித்ததும் கேசரி கலர் பொடி, ஏலக்காய் பொடி குங்குமப்பூ போடவும்.
 • அதன்பின் கோதுமை பாலை ஊற்றி, கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் சேர்க்கவும்.  முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா சேர்க்கவும்.
 • மிதமான தீயில் வைத்து கிளறவும்.
 • ஊற்றிய நெய் மிதந்து வரும்.
 • அதன்பின் சில நிமிடங்களில் ஊற்றிய நெய் முழுவதும் மேலே மிதந்து நிற்கும்.
 • கரண்டியில் ஒட்டாமல் இருக்கும் பக்குவத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

 • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

  View Recipe
Engineered By ZITIMA