Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 45 நிமிடங்கள்
Hits : 7504 Likes :
Ingredients
கடலை மாவு 500 கிராம்
அரிசி 2 மேஜைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 10
கிஸ்மிஸ் 10
கிராம்பு 5
சர்க்கரை (Sugar) 1 கிலோ
நெய் 500 மில்லி லிட்டர்
குங்குமப்பூ 2 சிட்டிகை
கேசரி கலர் பொடி 3 சிட்டிகை.
Preparation Method
கடலை மாவு, அரிசி மாவு இவற்றுடன் தண்ணீர் கலந்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், கிராம்பு போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
250 மில்லி லிட்டர் தண்ணீரில், சர்க்கரை போட்டு கொதிக்க வைத்து, கம்பிப் பதமாகக் காய்ச்சி இதில் கேசரி கலர் பொடி, குங்குமப்பூ போட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் கண் கரண்டியை (பூந்தி தேய்ப்பது) காய வைத்திருக்கும் நெய்யின் மீது பிடித்து, இன்னொரு கரண்டியில் மாவை ஊற்றி, வேகமாகத் தேய்க்கவும்.
தேய்த்ததும் கிளறி விடவும்.
வெந்ததும் எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு லேஸாக அழுத்தி சிறிது நேரம் கழித்து, எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்கவும்.
இத்துடன் வறுத்து, வைத்துள்ள முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், கிராம்பு இவற்றைப் போட்டு மத்து அல்லது குழிக்கரண்டியின் பின் பக்கம் கொண்டு, நசுக்கி, உருண்டைகளாக செய்து வைத்து, பரிமாறவும்.