Preparation Time: 5 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 4114 Likes :
Ingredients
சிறுபருப்பு 100 கிராம்
பச்சரிசி 200 கிராம்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகுஅரைதேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
முந்திரிப்பருப்பு 10
நெய் 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
Preparation Method
வாணலியை காய வைத்து அரிசி மற்றும் சிறுபருப்பை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த சிறுபருப்பு — அரிசி கலவையை 3 கப் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
முந்திரிப்பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ஊற வைத்துள்ள அரிசி—சிறுபருப்பு கலவையை தண்ணீரோடு ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
அரிசியும், பருப்பும் வெந்து கெட்டியானதும் வறுத்த முந்திரிப்பருப்பு போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.