Preparation Time: 5 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 4607 Likes :
Ingredients
சௌ சௌ 2
பச்சை மிளகாய் 5
புளி 1 நெல்லிக்காய் அளவு
பெரிய வெங்காயம் 1
பூண்டு 4 பல்
கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 1
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
சௌ சௌ காயின் விதைகளை நீக்கி விட்டு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தோலை நீக்கத் தேவை இல்லை.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, புளி, உளுத்தம்பருப்பு, மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, சௌ சௌ துண்டுகள் இவற்றை போட்டு நன்றாக வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து பரிமாறவும்.