Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 7546 Likes :
Ingredients
கோங்குரா கீரை (புளிச்ச கீரை) 2 கப் பச்சை மிளகாய் 15 பெரிய வெங்காயம் 1 பூண்டு 5 பல் தனியா 2 தேக்கரண்டி வெந்தயம் அரை தேக்கரண்டி கடுகு 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் 3 சிட்டிகை உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கோங்குரா கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 தேக்கரண்டி கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் இவற்றை போட்டு தாளித்து எடுத்து தனியே வைக்கவும்.
வேறு வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தனியா, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கீரையைப் போட்டு சுருள வதக்கி இறக்கி வைக்கவும்.
முதலில் வதக்கிய பொருட்கள் மற்றும் வதக்கிய கோங்குரா கீரை கலவையை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு, பூண்டு (ஒன்றிரண்டாக தட்டியது) போட்டு வதக்கி, அரைத்து வைத்துள்ள கீரையைப் போட்டு நன்றாக வதக்கி, இறக்கி பரிமாறவும்.