Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 4235 Likes :
Ingredients
கோவக்காய் 12
சின்னவெங்காயம் 8
சிகப்புமிளகாய் 4
தக்காளி 1
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
புளி 1 அரைநெல்லிக்காய்அளவு
சீரகம் அரைதேக்கரண்டி
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
கோவக்காய் மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோவக்காய் வட்டங்களைப் போட்டு நன்றாக மிருதுவாகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, மிளகாய், வெங்காயம் போட்டு சிவந்ததும், தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கவும்.
வதக்கி வைத்துள்ள கோவக்காய், அதன்பின் வதக்கிய பொருட்கள் இவற்றுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து பரிமாறவும்.