Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 6631 Likes :
Ingredients
வெள்ளை கொண்டைகடலை 200 கிராம்
பட்டை 2 துண்டு
தக்காளி 2
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 3 சிட்டிகை
தனியாத்தூள் 3 தேக்கரண்டி
சோம்பு அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
கொண்டைகடலையை 6 மணி நேரம் ஊற வைத்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் போட்டு மேலும் நன்றாக வதக்கி, இறக்கி ஆற விடவும்.
ஆறியபின் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து, அரைத்த கலவை, கொண்டைக்கடலை, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.