போண்டா மோர் குழம்பு

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3344
Likes :

Preparation Method

  • 1 கப் கடலைமாவில் தண்ணீர் சேர்த்து நீர்க்கக் கரைக்கவும்.
  • கரைத்தபின் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், இவற்றை கலந்து கொள்ளவும்.
  • தயிரை நன்றாக அடித்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சிகப்பு மிளகாயை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ½ கப் கடலைமாவு, சர்க்கரை, உப்புத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் இவற்றை ஒன்றாக கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவில் சிறு சிறு போண்டாக்களாக செய்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • நீர்க்கக் கரைத்த கடலைமாவை கனமான பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
  • கடலைமாவின் பச்சை வாசனை நீங்கி, ஓரளவு கெட்டியானபின் கலக்கி வைத்துள்ள தயிரை ஊற்றி கிளறவும்.
  • தயிர் சேர்த்தபின் கலவை கொதிக்கிறாற் போன்ற நிலையில் (கொதிக்கக் கூடாது) பொரித்து வைத்துள்ள போண்டாக்களைப் போட்டு இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA